Tuesday, December 9, 2008

எல்லோருமே பல்லக்கில் போக ஆசைப்பட்டால் பல்லக்கை தூக்குவது யார்?"

ஒரு பதிவர் இந்த பதிவில் எழுதியிருக்கிறார்.

மூட்டை துக்கும் தொழிலாளி சொன்னாராம் எல்லோரும் படித்து வேலைக்கு போய்விட்டால் மூட்டைதூக்கும் வேலைக்கு யார் இருப்பார்?

உடனே இவருக்கு குப்புன்னு வேர்த்துவிட்டதாம், அஹா எப்படி ஒரு கேள்வி கேட்டுட்டான் யாராலும் பதில் சொல்லமுடியாதுன்னு.

வாழ்க்கைத்தரம் பெருகும் வேளையில் எந்த ஒரு வேலைக்கும் நல்ல சம்பளம் மற்றும் எளிதான உபகரனங்கள் உபயோகப்படுத்தப்படும் என்கின்ற எளிதான பதில்கூட இவருக்கு புரியாமல் போனது விசித்திரம்தான்.

இதுக்கு பதிலே எனக்கு (யாருக்குமே) தெரியலை அதுனால எல்லோரும் கல்விகற்கக்கூடாது, மூட்டைதுக்கவாச்சும் நிறையபேர் படிக்காமல் இருக்கனும் ன்னு சொல்லுறது எப்படி இருக்கு தெரியுமா?

பிராமண இனத்தவரான முன்னாள் தமிழக முதல்வர், ராஜாஜி அவர்கள் குலத்தொழிலை மானவர்கள் விட்டுவிடக்கூடாது காலையில் கல்வி மாலையில் குலத்தொழில்ன்னு சட்டமியற்றபார்த்து முகரையிடி வாங்கிய காலகட்டத்தில், மதுரை டி.வி.எஸ் நிறுவனத்தின் ஒருகிளைதிறப்பு விழாவில் கீழ்கன்டவாறு பேசினார்.

"எல்லோருமே பல்லக்கில் போக ஆசைப்பட்டால் நடக்குமா? அப்புறம் பல்லக்கை தூக்குவது யார்?"

இதுபோலத்தான் இருக்கு இந்த பதிவரின் என்னமும்.

தேவுடா என்னைக்கு திருந்துவார்களோ இவர்கள்

No comments: