Thursday, December 11, 2008

அடிச்சுக்குறாங்கோ

கீழ்கன்ட பதிவுகளை வரிசையா படியுங்கள்.

1). டோன்டுவின் இந்தப்பதிவு
http://dondu.blogspot.com/2008/12/blog-post_9582.html

2). பெயரிலியின் இந்தப்பதிவு
http://wandererwaves.blogspot.com/2008/12/blog-post.html

3). லக்கியின் இந்தப்பதிவு
http://www.luckylookonline.com/2008/12/blog-post_11.html


என்ன ஏதாவது புரிந்ததா? நான் புரிய வக்க முயற்சி செய்யுறேன்.

டோன்டு, சோ, இந்துராம் இவர்கள் இலங்கைத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரசுக்கு அடிமைகளாகத்தான் இருக்கனும், விடுதலைப்புலிகளின் சீரிய தலைமையில் வளம் பெறக்கூடாது என்று இருப்பவர்கள்.

வாழ்வைத்தொலைத்தவர்களின் மீது கரிசன‌ம்கொன்ட பெயரிலி என்பவர், என்னடா இப்படி தமிழர்கள் இலங்கையில் படுகொலைசெய்யப்படுகிறார்கள், தமிழச்சிகள் கற்பழிக்கப்படுகிறார்கள் இதையெல்லாம் புரியாத டோன்டு, சோ, ராம் போன்றோர் கின்டலாக ஏதாவது செய்துகின்றே இருக்கின்றார்களே என்ற கடுப்பில்.

http://vayal-veli.blogspot.com/2008/11/blog-post_05.html என்ற பதிவில்

"எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்ற நிகழ்வு
டோண்டுவின் மகளுக்கு, இந்து ராமின் மகளுக்கு, சோ ராமசாமியின் மகளுக்கு நிகழ்ந்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கும் என்று எழுதிவிட்டார்.

அதுக்குத்தான் டோன்டு அவர்கள் நாகரீகம் இல்லாத பெயரிலி என்ற பதிவும்.

பெயரிலியின்
" நாகரிகத்துக்குப் பதிலான அநாகரீகம் நளினமானது" என்ற பதிவும் வந்தது.


சோ, ராம் போன்றோர்கள் பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் விமர்சனத்தையும் வசவுகளையும் தாங்கித்தான் ஆகவேன்டும். அவர்கள் வரிசையில் டோன்டுவையும் பெயரிலி சேர்த்துவிட்டார். சேர்த்ததால் டோன்டு வுக்கு பெருமையா இல்லை அப்படி எழுதியதால் சிறுமையா???

இதில் லக்கிக்கும் பெயரிலிக்கும் என்ன பிரச்சினைன்னு தெரியலை, யாரேனும் விளக்கினால் நல்லா இருக்கும்
ஏன் லக்கி இந்த திட்டு திட்டியிருக்கார் பெயரிலியை?

No comments: