Wednesday, December 17, 2008

வீதில போற ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வச்சுட்டுப்போ ன்னு சொன்னது யாரு?

இலைக்கரன் என்ற இவரின் பதிவில் காமெடி கொட்டிக்கிடக்குது. இவரது பதிவு வலையின் சாரம்சம் இந்துயிசம் மற்றும் பிராமன பெருமிதத்துவமே மேலோங்கியிருக்கு.

பெரியார், கலைஞர், பழ நெடுமாறன், சுப வீ ரபான்டியன், மருத்துவர் ஐய்யா ராமதாஸ் மற்றும் திருமாவளவன் போன்றோரின் ஒப்புயர்வற்ற செயல்களின் விளம்பரமாக‌ இந்த பதிவு வலைத்தளம் இருக்கின்றது. எங்கப்பன் குதிருக்குள் இல்லைஇன்னு இவரே அலறு அலறுன்னு அலறி யிருக்காரு.

இந்தப்பதிவில்
http://ilaikkaran.blogspot.com/2006/09/blog-post_115949699792281116.html

தலித் தொட்டால் தீட்டு என்ற காலம் போய் இப்போது பிராமணர் தொட்டால் தீட்டு என்று வந்துவிட்டது.

ந்னு எழுதியிருக்காரு.

தலித் தொட்டால் தீட்டு என்ற காலம் இருக்குன்னு ஒத்துக்குறாருல்ல?? தேவுடா இதைத்தானே தமிழ்த்தலைவர்கள் சொல்லிகிட்டே இருக்காங்க!!!!!!!!


இந்த பதிவில் http://ilaikkaran.blogspot.com/2008/12/blog-post.html இப்படி சொல்லியிருக்கின்றார்.

பாரத தேசத்தின் மக்களாகிய நாம் ஒற்றுமையாக ஒரே இனமாக அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை செய்து வந்து கொண்டு இருக்கின்றோம். நம் முன்னோர்கள் பல கோடி ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒற்றுமையை கிருத்துவ மிஷினரிகள் ஜாதி என்ற கோடாரியை கொண்டு பிளந்தனர். திராவிட திம்மிகளும் அதையே பின் பற்றி இட ஒதுக்கீடு என்று கிருமியை நம்மிடையே புகுத்தி விட்டனர்.

தேவுடா, ஆஸ்திரேலியா போயி ரெம்ப குழம்ப்பிபோயிட்டீங்கன்னு நினைக்கிறேன். பிராமனன், சத்திரியன், சூத்திரன், பஞ்சமன் ந்னு மக்களை நிறம் வாரியாக பிரிச்சி பிராமனனை உயர்ந்த இடத்தி வைத்தது பிராமணர்களின் மனு‍சாஸ்திரமா இல்லை கிருத்துவ மிசன்களா?

பதிவுக்கு பதிவு
ஒற்றுமையாக அவரவருக்கு விதிக்கபட்டு இருந்த கடமையை செவ்வனே செய்து வந்த ஹிந்துக்கள் ந்னு சொல்லுறீங்களே நீங்கள் சொல்லும் அந்த கடமை மனுசாஸ்திரம் போதித்ததுதானே!!


இந்துக்களை பிரிக்கிறாங்கோ பிரிக்கிறாங்கோன்னு பதிவுக்கு பதிவு அலறுறீங்களே, நீங்கள் மட்டும் ஏன் இந்துக்களை கோவில் உள்ளே சாமிசிலைகளுக்கு அருகில் அனுமதிப்பது இல்லை?, தமிழில் மந்திரம் சொல்ல விடுவதில்லை? அப்ப மட்டும் அவுங்க இந்து இல்லையா?.

அறியாமையால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்க்கும் அவர்களுக்கு தன்முனைப்பு பெறவேன்டி இட ஒதுகீட்டின் மூலம் சலுகை கொடுத்து அவர்களில் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும்போது மட்டும் அவர்களும் நாங்களும் இந்துதான் இட ஒதுகீடு கொடுக்காதேன்னு அலறித்துடிக்கிறீங்க.

இந்த பதிவில் நீங்களே ஒத்துக்கொள்ளுறீங்க, இந்துக்களுக்குள்ளே பிரிவு இருக்குன்னு.
http://ilaikkaran.blogspot.com/2008/03/blog-post_02.html

கலககாரரான அடாவடி ஆறுமுகம் தன் குண்டர் படையுடன் கோவிலின் உள்ளே நுழைய முயன்று உள்ளார். .

ஏன் உள்ளே நுழையக்கூடாதா? அவர் இந்து இல்லையா?

அவருக்கு பாதுகாப்பாக மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி அரசின் போலீசாரும் சென்று உள்ளனர்.

ஆகவே உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்புகொடுக்க கலைஞர் இருக்கின்றான்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.

பாரம்பரிய முறைகளை சீரழிக்க வந்த கூட்டத்தினை துணிந்து எதிர்த்தனர் தீட்ஷிதர்கள்.
தமிழர்களை ஒடுக்க்கும் பாரம்பரிய முறைகளை சீரழிக்க வந்தவர்கள் என்ற உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.

தன் உயிரை துச்சமென நினைத்து எதிர்த்து நின்றனர் தீட்ஷிதர்கள். அதை பார்த்த என் உடல் மெய்சிலிர்த்துவிட்டது.

சுருளிராஜன் சொன்னதுதான் உங்களுக்கும். போர்வையை எடுத்து போர்த்திக்கொள்ளூங்கள், பார்த்து, மாடு வந்து புல்லுன்னு மேஞ்சிடப்போகுது.

இந்த ஒரு பதிவுலையே அனைத்து உண்மைகளையும் ஒத்துக்கொன்டீரே தேவுடா.

இதுல பாத்தா http://ilaikkaran.blogspot.com/2007/08/blog-post_07.html

மேலும் வாடிகன் உத்தரவின் படி இந்து மதத்தினை ஒழிக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு கீழான திட்டத்தினை தடுத்து வைத்து உள்ளனர்.

இப்புடீன்னு எழுதிகீறிங்க தேவுடா. வாடிகன் என்ன ஒரு கிருத்துவரை அர்ச்சகரா போட உத்தரவு போட்டுச்சா? இந்துவைத்தானே போட சொல்லுச்சு. நிங்கள்தான் சொல்லுறீங்க ஆல் இந்த்துக்களும் சமம், ஒன்னுன்னு அப்புறம் என்ன? (வாயை இறுக்க மூடினாலும் அதையும் தான்டி நாற்றம் வெளியே வதுருதுல்ல சமயத்துல?)


இந்தப்பதிவுல http://ilaikkaran.blogspot.com/2008/08/blog-post_30.html
இப்புடி எழுதிகீறிங்க‌

மேலும் உலகின் முக்கிய ஹிந்து தலமான திருமலையை தேர்ந்து எடுத்தது ஹிந்துக்கள் இடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெரசாவின் ஆசியோடு கட்சி தொடங்கும் இந்த வியாதி வாடிகன் உத்தரவின் படி திருமலையை ரோமலை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சிலர் சந்தேகம் கொள்கின்றனர்.

தேவடா எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு புன்னாயிடுச்சு.

இதுல

http://ilaikkaran.blogspot.com/2007/10/blog-post_20.html


பல லட்சம் ஆண்டு கால வரலாற்றில் ஹிந்துக்களை காக்க பல மாவீரர்கள் அவதாரம் எடுத்து உள்ளனர். அவ்வீரர்களில் முக்கியமானவர் ஸ்ரீமான் மோடி ஆவார்.
ந்னு எழுதிகிறீங்க இந்த அவதாரம் அப்பாவி இந்துக்களை காக்க அப்பாவி முஸ்லீம்களை கொல்லுது. அதுபோலத்தானே அப்பவி முஸ்லீம்களை காக்க அப்பாவி இந்துக்களை முஸ்லீம் அவதாரம் கொல்லுது!!. அவதாரத்துக்கு அவதாரம் சரிதானே?

அதுலயே கரன் தப்பருக்கு பதில் சொல்லாமல் மோடி ஓடிய நிகழ்வினை இப்படி சொல்லுறீங்க‌

அதே நிகழ்வை பற்றி மாற்றி மாற்றி கேள்வி எழுப்பினார் கரண் தாப்பர். போடா ஜாட்டான், நீ என்ன என்னை கேள்வி கேட்பது என அரங்கத்தை விட்டு எழுந்து வீர நடை போட்டார் ஸ்ரீமான் மோடி. நாடே அதிர்ந்து விட்டது. இவ்வீர புருஷர் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோமே என்று 80 கோடி ஹிந்துக்களும் மனம் நெகிழ்ந்து போயினர்.

இதுக்குபேர்தான் வீதில போற ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வச்சுட்டுப்போ ன்னு சொல்லுறதுன்னு எங்க ஊருல சொல்லிக்கிறாங்கோ.

இந்தப்பதிவுதாங்க காமடியின் உச்சகட்டம்.
http://ilaikkaran.blogspot.com/2007/09/blog-post_18.html
அதெப்புடீங்க கொஞ்சம்கூட சிரிக்காம இப்புடி வடிவேலுவ விட சிறப்பா காமடி பன்னுறீங்க?

ஹிந்து மதத்தை உலகம் எல்லாம் பரப்பி வரும் பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர். எஸ். எஸ் போன்ற அமைப்பினரின் நற்குணங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை இந்த ஸ்தாபனங்களுக்கு வழங்க அந்த குழுவினர் தீர்மானித்து இருந்தனர்.



பதிவுக்கு பதிவு இந்து இந்து, இந்து ஒற்றுமைன்னு கூப்படு போடுறியே தேவுடா, உன் நாத்தம் பிடிச்ச நினைப்பை, சாதிப்பெருமிதத்தை நீ மறைக்க நினைக்கலையோ இல்லை மறைக்க நினைச்சு முடியலையோ. நீயே பாரு உன் பதிவை இதுல

http://ilaikkaran.blogspot.com/2008/10/blog-post_5963.html

பிராமண சமுதாய மக்கள் நம் பாரத மாதாவின் மூத்த புதல்வர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உலகின் மிக சிறந்த அறிவாளிகள் ஆன யூத மக்களுக்கு சரிநிகர் சமானமாக விளங்குபவர்கள் அவர்கள். ஆனால் அந்த சமுதாயத்தினை மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டிவிட்டனர். அதனால் பலன் பெற்றது யார்?. நிச்சயமாக பிராமணர்கள்தான். அமெரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரை அவர்களின் ஆளுமை கொடி கட்டி பறக்கின்றது.


சிறந்த அறிவாளிகள் என்றால் அவர்களை எப்படி அடித்து விரட்ட முடியும்? அவர்களையே அடித்து விரட்டியவர்கள் எப்படிபட்ட அறிவாளிகளாக இருப்பர்?

அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை பிராமனர்கள் மட்டுமே இருந்தது அந்தக்காலம். எங்கள் ஐய்யா பெரியார், கர்ம வீரர் காமராஜர், மற்றும் கலைஞர் கருனாநிதி இவர்கள் தயவில் தமிழர்களும் உலகெங்கும் சென்று தாங்களும் தமிழையும் தழைத்தோங்கச்செய்கின்றனர்.

நல்லா தொடர்ந்து எழுதுங்க என்டர்டைன்மென்ட்டா இருக்கு. உங்களவாவின் ஒடுக்குமுறைக்கு உங்கள் பதிவே சாட்சியா இருக்கு.

தேவுடா இவர்களுக்கு முக்தி கொடுங்கப்பா!!!!!!!!

Thursday, December 11, 2008

அடிச்சுக்குறாங்கோ

கீழ்கன்ட பதிவுகளை வரிசையா படியுங்கள்.

1). டோன்டுவின் இந்தப்பதிவு
http://dondu.blogspot.com/2008/12/blog-post_9582.html

2). பெயரிலியின் இந்தப்பதிவு
http://wandererwaves.blogspot.com/2008/12/blog-post.html

3). லக்கியின் இந்தப்பதிவு
http://www.luckylookonline.com/2008/12/blog-post_11.html


என்ன ஏதாவது புரிந்ததா? நான் புரிய வக்க முயற்சி செய்யுறேன்.

டோன்டு, சோ, இந்துராம் இவர்கள் இலங்கைத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரசுக்கு அடிமைகளாகத்தான் இருக்கனும், விடுதலைப்புலிகளின் சீரிய தலைமையில் வளம் பெறக்கூடாது என்று இருப்பவர்கள்.

வாழ்வைத்தொலைத்தவர்களின் மீது கரிசன‌ம்கொன்ட பெயரிலி என்பவர், என்னடா இப்படி தமிழர்கள் இலங்கையில் படுகொலைசெய்யப்படுகிறார்கள், தமிழச்சிகள் கற்பழிக்கப்படுகிறார்கள் இதையெல்லாம் புரியாத டோன்டு, சோ, ராம் போன்றோர் கின்டலாக ஏதாவது செய்துகின்றே இருக்கின்றார்களே என்ற கடுப்பில்.

http://vayal-veli.blogspot.com/2008/11/blog-post_05.html என்ற பதிவில்

"எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்ற நிகழ்வு
டோண்டுவின் மகளுக்கு, இந்து ராமின் மகளுக்கு, சோ ராமசாமியின் மகளுக்கு நிகழ்ந்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கும் என்று எழுதிவிட்டார்.

அதுக்குத்தான் டோன்டு அவர்கள் நாகரீகம் இல்லாத பெயரிலி என்ற பதிவும்.

பெயரிலியின்
" நாகரிகத்துக்குப் பதிலான அநாகரீகம் நளினமானது" என்ற பதிவும் வந்தது.


சோ, ராம் போன்றோர்கள் பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் விமர்சனத்தையும் வசவுகளையும் தாங்கித்தான் ஆகவேன்டும். அவர்கள் வரிசையில் டோன்டுவையும் பெயரிலி சேர்த்துவிட்டார். சேர்த்ததால் டோன்டு வுக்கு பெருமையா இல்லை அப்படி எழுதியதால் சிறுமையா???

இதில் லக்கிக்கும் பெயரிலிக்கும் என்ன பிரச்சினைன்னு தெரியலை, யாரேனும் விளக்கினால் நல்லா இருக்கும்
ஏன் லக்கி இந்த திட்டு திட்டியிருக்கார் பெயரிலியை?

Tuesday, December 9, 2008

எல்லோருமே பல்லக்கில் போக ஆசைப்பட்டால் பல்லக்கை தூக்குவது யார்?"

ஒரு பதிவர் இந்த பதிவில் எழுதியிருக்கிறார்.

மூட்டை துக்கும் தொழிலாளி சொன்னாராம் எல்லோரும் படித்து வேலைக்கு போய்விட்டால் மூட்டைதூக்கும் வேலைக்கு யார் இருப்பார்?

உடனே இவருக்கு குப்புன்னு வேர்த்துவிட்டதாம், அஹா எப்படி ஒரு கேள்வி கேட்டுட்டான் யாராலும் பதில் சொல்லமுடியாதுன்னு.

வாழ்க்கைத்தரம் பெருகும் வேளையில் எந்த ஒரு வேலைக்கும் நல்ல சம்பளம் மற்றும் எளிதான உபகரனங்கள் உபயோகப்படுத்தப்படும் என்கின்ற எளிதான பதில்கூட இவருக்கு புரியாமல் போனது விசித்திரம்தான்.

இதுக்கு பதிலே எனக்கு (யாருக்குமே) தெரியலை அதுனால எல்லோரும் கல்விகற்கக்கூடாது, மூட்டைதுக்கவாச்சும் நிறையபேர் படிக்காமல் இருக்கனும் ன்னு சொல்லுறது எப்படி இருக்கு தெரியுமா?

பிராமண இனத்தவரான முன்னாள் தமிழக முதல்வர், ராஜாஜி அவர்கள் குலத்தொழிலை மானவர்கள் விட்டுவிடக்கூடாது காலையில் கல்வி மாலையில் குலத்தொழில்ன்னு சட்டமியற்றபார்த்து முகரையிடி வாங்கிய காலகட்டத்தில், மதுரை டி.வி.எஸ் நிறுவனத்தின் ஒருகிளைதிறப்பு விழாவில் கீழ்கன்டவாறு பேசினார்.

"எல்லோருமே பல்லக்கில் போக ஆசைப்பட்டால் நடக்குமா? அப்புறம் பல்லக்கை தூக்குவது யார்?"

இதுபோலத்தான் இருக்கு இந்த பதிவரின் என்னமும்.

தேவுடா என்னைக்கு திருந்துவார்களோ இவர்கள்